இறுதியாண்டு செமஸ்டர் தேதி: சென்னை பல்கலை அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும், இருப்பினும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் மட்டும் யுஜிசி அறிவுரைப்படி நடத்தப்படும் என்பதும் தெரிந்ததே

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும், இருப்பினும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் மட்டும் யுஜிசி அறிவுரைப்படி நடத்தப்படும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு வரும் 21ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் ’சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த இணைப்புக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 21 முதல் 30 வரை நடைபெறும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது 

மேலும் இந்த தேர்வின் முடிவுகள் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்கள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web