தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு பத்தாம் தேதி முதல் தடை!

தமிழகத்தில் வெளியானது கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தடைகள் அறிவிக்கப்பட்டது!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது.தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்கு பதிவானது நடைபெற்றது. நிலையில் தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்துள்ளது.  தற்போது தமிழக அரசு கொரோனா  பாதிப்புக்கான தடுப்பு நடவடிக்கை மற்றும் தடைகளை அறிவித்துள்ளது.

lock down

அதன்படி தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு பத்தாம் தேதி முதல் தடை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கோயம்பேடு வணிக வளாகங்களில் சில்லரை வியாபாரிகளுக்கு தடை விதித்துள்ளது. மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது.

பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வணிக வளாகங்கள் அனைத்து  ஷோரூம்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. மேலும் உணவகங்கள் தேனீர் கடைகளில் 50% இருக்கையும், இரவு 11 மணி வரை மட்டுமே உணவருந்த அனுமதி அளித்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு பூங்காக்கள் திரையரங்குகளில் 50%பேருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு மேலும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி டிவி, திரைப்பட படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளித்துள்ளது. வாடகை டாக்ஸி ஓட்டுனர் தவிர்த்து மூன்று பேர் மட்டுமே பயணிக்க அனுமதி. மேலும் உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வெளிநாடு வெளிமாநில இருந்து வருவோருக்கு கட்டாயமாக இ பாஸ் நடைமுறையில் இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

From around the web