ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை 3 நாட்கள் தமிழகத்தில் திருவிழா!

ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை தமிழகத்தில் 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என தமிழக அரசு தகவல்!
 
ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை 3 நாட்கள் தமிழகத்தில் திருவிழா!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் இரு தினங்களுக்கு முன்பு  நடைபெற்றது. மேலும் தமிழகத்திலுள்ள 234 தொகுதியிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் மிகவும் பலத்த கண்காணிப்பு மத்தியில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா தாக்கமானது தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது.

tamilnadu

நேற்றைய தினம் சில தடைகள் கட்டுப்பாடுகள் போன்றவற்றை விதித்தது. மேலும் தமிழக அரசானது தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் பயன்படவில்லை என்றால் தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு  நேரிடலாம் எனவும் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பத்தாம் தேதி முதல் ஊர்வலத்தில் கோவில் திருவிழாக்களுக்கு தடைவிதித்துள்ளது.

ஆனால் ஏப்ரல் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை தமிழகத்தில் 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி   திருவிழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுகாதார,முன் களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.தமிழகத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் அனைத்து திருவிழாக்கு தடை செய்யபட்ட நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web