"கொரோனா தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயம்" இவ்வளவு சலுகைகளா!!

கொரோனா தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு!
 
private hospital

மக்கள் அதிகம் பேசப்படும் வார்த்தையாக ஆட்கொல்லி நோயான கொரோனாவின் பேச்சு அதிகமாக உள்ளது. அதுவும் நம் தமிழகத்தில் சென்னையில் அதிகமாக இந்த நோயின் தாக்கம் உள்ளது. இந்த இக்கட்டான காலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது திமுக. மேலும் திமுக சார்பில் முதல்வராக கட்சியின் தலைவருமான மு க ஸ்டாலின் உள்ளார். மேலும் அவர் தன் ஆட்சியின் தொடக்க முதலே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வதில் குறிக்கோளாக உள்ளார். மேலும் அவர் அறிவிக்கும் அத்துணை நிவாரணப் பொருட்களும் நிவாரண நிதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.private hospital

இந்நிலையில் தற்போது பல தனியார் மருத்துவமனைகளிலும் சீர்திருத்தங்களை செய்து வருகிறார். அதைத்தொடர்ந்து தற்போது தமிழக அரசானது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாத படுக்கை வசதிக்கு மருத்துவமனையின் தரத்தை பொருத்து 5,000 முதல் 7,500 ரூபாய் கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது தமிழக அரசு.

மேலும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு 15 ஆயிரத்தை நிர்ணயித்துள்ளது. மேலும் வெண்டிலேட்டர் உடன் கூடிய சிகிச்சைக்கு 35 ஆயிரம் வரை நிர்ணயித்து உள்ளது.தமிழக அரசு. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வசதி கொண்ட சிகிச்சைக்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் ஆக்சிசன் உடன் கூடிய தீவிர சிகிச்சைக்காக படிப்படியாக குறைப்பதற்கு மட்டும் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ளது மேலும் சிகிச்சை அளிக்கப்பட்ட அதிகரிக்கப்பட்ட தொகையானது இரண்டு மாதங்களுக்குள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 435 39 93, 104 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என்றும் அரசு கூறியுள்ளது. மேலும் ஆதாரங்களுடன் புகார் நிரூபிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

From around the web