மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய நிதி அமைச்சகம்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய நிலுவை அகவிலைப்படி நிறுத்தம் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது!
 
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய நிதி அமைச்சகம்!

இந்தியாவில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயான கொரோனாவின்  தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக டெல்லி மும்பை சென்னை போன்ற பகுதிகளில் கொரோனாநோயின் தாக்கம் இரண்டாவதாக எழுந்து அங்குள்ள மக்களை மிகுந்த சோகத்தில் தள்ளியது. மேலும் பல மாநிலங்களிலும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. மேலும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன.government

மேலும் மத்திய அரசின் சார்பில் இன்று  மதியம் மே ஜூன் மாதங்களில் 80 கோடி நபருக்கு 5 கிலோ மதிப்பிலான இலவச உணவு தானியங்கள் வழங்க நிதி  ஒதுக்கி உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய நிலுவை அகவிலைப்படி நிறுத்தம் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

2020 ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2021 ஜூன் 30ஆம் தேதி வரை நிலுவை அகவிலைப்படி வழங்கப்படாது என்றும் கூறியுள்ளது. எந்த தேதியில் அறிவிக்கப்படுகிறது அதற்குப் பின்னர் மட்டுமே அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

From around the web