ரயில்வே குறித்தான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

இந்திய அளவில் கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களுக்குள் பல்வேறு உத்தரவுகளையும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் பிறப்பித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்தது. இதனால் இந்திய அரசானது கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே முழு ஊரடங்கு அமல்படுத்தியது.

கடந்த ஆண்டின் இறுதியில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. நாடாளுமன்றம் ஆனது கூடும் நேரத்தை மாற்றியது. பின்னர் பல்வேறு கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பழைய நேரத்திற்கே நாடாளுமன்றம் ஆனது மாற்றப்பட்டது. மேலும் சில தினங்களில் முன்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் பெட்ரோல், டீசல் விலை எதிர்த்து அமளியில் ஈடுபட்டனர்.
ரயில்வே துறை பற்றி அனைவருக்கும் அச்சமும் இருந்தது. அது என்னவெனில் ரயில்வே துறை அங்கு வெகுவிரைவில் தனியார்மயமாக்க படலாம் . அனைவர் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாநிலங்களவையில் இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ரயில்வே துறை ஒருபோதும் தனியார் மயமாக்கது எனவும் கூறியது. மேலும் சொத்துக்கள் கட்டமைப்பு வசதிகள் புதிய வருவாய் ஆதாரங்களாக மேம்படுத்தப்படும் எனவும் மத்திய அரசானது மாநிலங்களவையில் கூறியது. இதனால் மக்கள் மத்தியில் இருந்த குழப்பமும் நீங்கியது.