தினமும் 50 மெட்ரிக் டன்  வழங்க முடியும் மத்திய அரசு உறுதி!

உர நிறுவனங்கள் மூலம் நாள்தோறும் 50 மெட்ரிக் டன் ஆக்சிசன்வழங்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது!
 
தினமும் 50 மெட்ரிக் டன் வழங்க முடியும் மத்திய அரசு உறுதி!

தற்போது தமிழகத்தில் மிகவும் அதிகமாக கொரோனா வைரஸ் வந்துள்ளது. கொரோனாக்கு எதிராக நாடே போராடிக் கொண்டுள்ளது. இந்நிலையில் பல தினங்களுக்கு முன்பாக மத்திய அரசின் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. oxygen

மேலும் பல பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது. இதற்கு  இந்தியாவுக்கு பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா அமெரிக்கா துபாய் போன்ற நாடுகளில் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. தமிழக அரசின் சார்பிலும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன்  உற்பத்தி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது மத்திய அரசானது ஆக்சிசன் வழங்க முடியும் என்று உறுதி அளித்துள்ளது.

மேலும் உர நிறுவனங்கள் மூலம் தினமும் 50 மெட்ரிக் டன் ஆக்சிசன் வழங்க முடியும் என்று கூறியுள்ளது. அதன்படி மத்திய அரசின் இஃப்கோ உர தொழிற்சாலையில் தினசரி 33 ஆயிரம் கன மீட்டர் அளவு ஆக்சிசன் உற்பத்தி செய்யலாம் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும்  உர நிறுவனங்கள் மூலம் தினந்தோறும் 50 மெட்ரிக் ஆக்சிசனை வழங்க முடியும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை கூறியுள்ளது. மேலும் இஃப்கோ உர  நிறுவனமானது குஜராத் மாநிலத்தில் உள்ளது. மேலும் குஜராத்தில் உள்ள இஃப்கோ உர நிறுவனத்துக்கு ஒரு மணி நேரத்தில் 200 கன மீட்டர் அளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்றும் கூறியுள்ளது .அதனால் தினசரி இந்த தொழிற்சாலையில் இருந்து மட்டும் 33 ஆயிரம் கன மீட்டர் அளவு ஆக்சிஜனை அதிகம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

From around the web