ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் மத்திய அரசு தரப்பு!

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா தகவல்!
 
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் மத்திய அரசு தரப்பு!

தமிழகத்தில் முத்து நகரமாக காணப்படுகிறது தூத்துக்குடி மாநகரம் .மேலும் இந்த தூத்துக்குடி மாநகரில் முத்துக் குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் காணப்படுகிறது.மேலும் இங்கு தயாரிக்கப்படும் உப்பானது தமிழகம் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தூத்துக்குடி மாநகரில்  சில  வருடங்களுக்கு முன்பாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

superme court

இதற்கு எதிராக குரல் கொடுத்து பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதனால் இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆலையை திறக்க மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது இந்தியாவில் ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. ஆலையின் நிர்வாகம்சில தினங்களுக்கு முன்பு தங்களை ஆக்சிசன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதற்கு ஆதரவாக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வாதத்தில் ஈடுபட்டு இருந்தார்.

தற்போது அவர் கூறியுள்ளார் ஆக்சிஜன் உற்பத்தி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். மேலும் நாட்டில் கொரோனா அதிகரித்து உள்ளதால் ஆக்சிஜன் தேவை உயர்ந்துள்ளதாகவும் அதனால் அனுமதி தரலாம் என்றும் கூறினார். மேலும் ஆக்சன் பற்றாக்குறை பற்றிய அனைத்து விஷயங்களையும் நாங்களே முன்வந்து விசாரிப்போம் என்று உச்சநீதிமன்றம் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசின் வழக்கறிஞர் சார்பில் கொரோனா பாதித்தவர்களை காப்பாற்றுவதற்கு ஆக்சிஜன் அளிக்கப்படுவதாக, ஆக்சிஜன் உற்பத்தி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம்  வாதம் நடைபெற்றது. மேலும் ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்று வைகோ  உள்ளிட்டோர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web