நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி தற்கொலையால் பரபரப்பு

நீட் தேர்வு அச்சத்தால் மதுரையில் ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

நீட் தேர்வு அச்சத்தால் மதுரையில் ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நீட் தேர்வு அச்சம் காரணமாக ஏற்கனவே சுபஸ்ரீ என்ற மாணவியும், விக்னேஷ் என்ற மாணவரும் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டிருந்த தற்போது மதுரையிலும் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிகாலை ஒரு மணி வரை  ஜோதி துர்கா என்ற மாணவி படித்துக் கொண்டிருந்ததாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்த நிலையில் சற்றுமுன் அவர் தூக்கில் தொங்கியதை குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

19 வயதான  ஜோதி துர்கா என்ற மாணவி மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள  மதுரை காவல் சார்பு ஆய்வாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு அச்சத்தால் இன்று உயிரிழந்தாரா என்பது குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே சமீபத்தில் நடந்த இரண்டு மாணவர்களின் தற்கொலையால் எதிர்க்கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு தற்கொலை நிகழ்ந்துள்ளதால் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web