தட்டிக் கேட்டதால் மாமனார் அடித்துக் கொலை; மருமகன் தலைமறைவு!

குடும்பத் தகராறில் தட்டிக்கேட்ட மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது!
 
தட்டிக் கேட்டதால் மாமனார் அடித்துக் கொலை; மருமகன் தலைமறைவு!

தினந்தோறும் தமிழகத்தில் குடும்பத்தகராறு குறித்தான தகவல் எப்பொழுதும் ஒன்றாவது காணப்படும். மேலும் கணவனுக்கு மனைவி  பிரச்சனை, கணவன் மீது மனைவி அடித்தல், மனைவி கணவனை அடித்துசித்திரவதை செய்தல் போன்ற செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு விதமான பிரச்சினைகளும் குறிப்பாக சந்தேகம்தான் காரணமாக காணப்படுகிறது. மேலும் மக்கள் மத்தியில் காதல் திருமணம் என்றாலே அதிக பிரச்சனை என்ற எண்ணம் நிலவுகிறது, என்றும் அதிகம் விவாகரத்து பெறும் திருமணமாக காதல் திருமணமும் உள்ளது என்பதும் வேதனையான ஒன்றாக காணப்படுகிறது.death

இத்தகைய காதல் திருமணத்தில் தான் போன்ற பல பிரச்சனைகள் இருப்பினும் நாள் பார்த்து, நேரம் பார்த்து ஊர்கூடி செய்யப்படும் திருமணத்திலும் நாளுக்கு நாள் பிரச்சினைகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளது மிகுந்த கஷ்டத்தை உருவாக்கியுள்ளது. மேலும் பல மாநிலங்களில் விவாகரத்து என்பது சாதாரணமான ஒன்றாக காணப்படுகிறது. மேலும் இதை தட்டி கேட்க வருபவர்கள் மீதும் தாக்கப்படும் சம்பவம் கொடுமையாக உள்ளது. தொடர்ந்து தற்போது பெண்ணின்தந்தையை  கொலை செய்துவிட்டு ஓடியுள்ளார் பெண்ணின் கணவன்.

சம்பவம் நம் தமிழகத்தில் நடைபெற்று உள்ளது, குறிப்பாக தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் இச்செயலானது நடைபெற்று உள்ளது.அதன்படி பெரம்பலூர் மாவட்டம் கூடலூரில் குடும்பத் தகராறை தட்டிக்கேட்ட மாமனார் செல்வமுத்து, மருமகன் அடித்துக் கொன்றார். அடித்துக் கொன்ற மருமகன் செல்வம் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் கொலை வழக்கில் தலைமறைவான மருமகன் செல்வம் உள்பட 4 பேரை மருவத்தூர் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெண்ணின் குடும்பத்தார் மத்தியில் மிகுந்த சோகத்தை கொடுத்துள்ளது.

From around the web