முதல்வர் வீட்டின் முன் இறந்த ஒருமாத குழந்தையின் தந்தை போராட்டம்: பெரும் பரபரப்பு

கிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்ததன் காரணமாகவே தனது ஒரு மாத குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வீட்டின் முன் குழந்தையின் தந்தை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரின் பசாவேஸ்வர நகரில் வெங்கடேஷ் என்பவரின் ஒரு மாத வயதுடைய குழந்தைக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது அந்த குழந்தையின் இருதயத்தில் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் உடனே மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தப்படது. ஆனால் 200 கி.மீ அலைந்தும், கிட்டத்தட்ட 12 தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றும், எந்த
 

முதல்வர் வீட்டின் முன் இறந்த ஒருமாத குழந்தையின் தந்தை போராட்டம்: பெரும் பரபரப்பு

கிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்ததன் காரணமாகவே தனது ஒரு மாத குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வீட்டின் முன் குழந்தையின் தந்தை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரின் பசாவேஸ்வர நகரில் வெங்கடேஷ் என்பவரின் ஒரு மாத வயதுடைய குழந்தைக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது

அந்த குழந்தையின் இருதயத்தில் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் உடனே மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தப்படது.

ஆனால் 200 கி.மீ அலைந்தும், கிட்டத்தட்ட 12 தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றும், எந்த மருத்துவமனையும் தன்னுடைய குழந்தையை அனுமதிக்கவில்லை என்றும், இதனால் தன்னுடைய குழந்தை இறந்துவிட்டது என்றும் வெங்கடேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் அவர் முதல்வர் எடியூராப்பாவின் வீட்டின் முன் போராட்டம் நடத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெங்கடேஷிடம் நடந்ததை ஒரு கடிதமாக எழுதி வாங்கிய முதல்வரின் அலுவலக ஊழியர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து வெங்கடேஷ் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

From around the web