சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கடை திறந்து வைத்ததால் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் ஆகிய இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம் இந்த நிலையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சாத்தான்குளத்தில் உள்ள அனைத்து கடைகளை அடைத்து போராட்டத்தில் வியாபாரிகள் இறங்கினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கடை திறந்து வைத்ததால் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் ஆகிய இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சாத்தான்குளத்தில் உள்ள அனைத்து கடைகளை அடைத்து போராட்டத்தில் வியாபாரிகள் இறங்கினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் 2 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது

இதன்படி சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் இருவரின் உடலையும் 3 பேர் கொண்ட மருத்துவர் குழு முன்னிலையில் பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

காவல்துறையினர் தரப்பில் தந்தை மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web