இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம்: உபியில் பரபரப்பு 

 

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இந்துக்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பின்னர் இந்துக்களின் ஆதிக்கம் அதிகமாகி வருவதாகவும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் 

இந்த நிலையில் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சாது ஒருவர் திடீரென சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து உடனே உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளார் 

அயோத்தியின் தபஸ்வி மடத்தின் சாதுவாக இருந்த மஹந்த பரம்ஹன்ஸ் தாஸ் என்பவர்தான் இந்த உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அயோத்தியில் ராம்ஜானகி கோவிலின் முன்பாக இந்த உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளதாகவும் தனது கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முடியப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என கோரி சாது ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராம்ஜானகி கோவில் முன் உண்ணாவிரதத்தை தொடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web