கட்டுப்பாடு விதிக்காவிட்டாலும் சமூக இடைவெளி பின்பற்றிய விவசாயிகள்!

தமிழகம் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட அதிகாரிகள் உடன் பிரதமர் மோடி காணொலியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்!
 
கட்டுப்பாடு விதிக்காவிட்டாலும் சமூக இடைவெளி பின்பற்றிய விவசாயிகள்!

தற்போது நாடெங்கும் கொரோனாவின் பரவல் அதிகமாக உள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த இன்னலில் ஆளாகின்றனர். மேலும் பல மாநிலங்களில் இந்த கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. காரணம் என்னவெனில் அந்த மாநிலங்களில் ஆரம்பம் முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தற்போது அந்த கொரோனாநோயின் தாக்கம் மிகவும் குறைந்து வருவதாக காணப்படுகிறது. ஆனால் தமிழகம் கர்நாடகம் போன்ற தென் மாநிலங்களில் தற்போது இந்த கொரோனா பாதிப்பானது மிகவும் உயர்ந்து காணப்படுகிறது.modi

இதனை கட்டுப்படுத்த குறித்தாக ஆலோசனையை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் மேற்கொண்டு உள்ளார். மேலும் இந்த ஆலோசனையில் தமிழகம் கர்நாடகம் உட்பட 10 மாநிலங்களை சேர்ந்த மாவட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்று உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்பொழுது நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்பமான தகவல்களை கூறியிருந்தார். அதன்படி மாவட்ட அளவிலான அதிகாரிகள் இந்த போராட்ட காலத்தில் படைத்தவர்களாக உள்ளனர் என அவர் அவர்களைப் பாராட்டி உள்ளார்.

மேலும் வேளாண் துறைக்கு கொரோனா  முதல் அலையின் போது எந்த ஒரு கட்டுப்பாடும் அரசு விதிக்கவில்லை ஆனாலும் நம் விவசாயிகள் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்றினர் என கூறினார். இதனால் நம் விவசாய மிகவும்  பலமாக காணப்படுவதாகவும் அவர் பேசினார். மேலும் தற்போது இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் கொரோனா  குறைந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் அனைவரும் இதனை எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விட்டார். மேலும் நாட்டில் தற்போது தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

From around the web