விவசாயிகள் போராட்டம் வாபஸ்: போராட்டம் திசை திரும்பியதாக அறிவிப்பு

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் வட மாநில விவசாயிகள் போராட்டம் செய்து வந்தனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி செய்தும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நேற்று குடியரசு தின அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பல விவசாயிகள் காயமடைந்தனர் என்பதும் காவல்துறையினர் ஒரு சிலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

farmer

விவசாயிகள் போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்ததால் தான் வன்முறை வெடித்தது என்றும் விவசாயிகள் வன்முறைக்கு எந்த விதத்திலும் காரணம் இல்லை என்றும் விவசாயிகள் தரப்பில் இருந்து கூறினார்கள்

இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் வருவதாக விவசாயிகள் சங்கங்களின் ஒரு பிரிவு அறிவித்துள்ளது. போராட்டம் ஒரு சிலரால் திசைமாறி செல்வதால் இதில் பங்கேற்க விரும்பவில்லை என ஒருசில விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது இதனை அடுத்து விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web