வேதனையின் விவசாயிகள் ஒரு கிலோ வெண்டைக்காய் எட்டு ரூபாய் விற்பனை!

ஒரு கிலோ வெண்டைக்காய் 8 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் அதனை சந்தைக்கு கொண்டு செல்ல கூட தயங்குகின்றனர்!
 
வேதனையின் விவசாயிகள் ஒரு கிலோ வெண்டைக்காய் எட்டு ரூபாய் விற்பனை!

தற்போது நம் நாட்டின் பல பகுதிகளில் பொது  ஊரடங்கு அமலில் உள்ளன. இதனால் பல தங்களது வாழ்வாதாரத்தை இழந்து காணப்படுகின்றனர். பலரும் தங்களது தொழிலில் இழந்தும் காணப்படுகின்றனர். மேலும் பல பகுதிகளில் தொழிற்சாலைகளும் மூடப்படுவதால் தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களும் வேலை இன்றி தவிக்கின்றனர்.ஊரடங்கு ஒரு வேலைக்கு மட்டுமே முழு அனுமதி அளித்துள்ளது ஒட்டுமொத்த அரசு. வேலை என்று சொல்லமுடியாது சேவை என்றே சொல்லலாம்.farmers

அதன்படி இந்த ஊரடங்கு விவசாயத்திற்கு விதிவிலக்காக உள்ளது. அதனால் விவசாயம் 24 மணி நேரமும் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். காரணம் என்னவெனில் விவசாயிகளின் உற்பத்தி செய்யும் காய்கறிகள் பலவும் சந்தையில் மிகவும் அடிமட்ட விற்கப்படுவதால் அவர்கள் லாபம் என்ன நஷ்டத்தையே அதிகம் அடைகின்றனர். மேலும் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் காய்கறிகளை போட்டுக்கொண்டு தங்களது வேதனையை வெளிப்படுத்துகின்றனர் விவசாயிகள்.

 திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் அதிகமாக வெண்டைக்காய் விளைச்சல் உற்பத்தி செய்யப்படும் நிலையில் அங்குள்ள மக்கள் வெண்டைக்காயை சந்தைக்கு எடுத்து செல்ல சந்தையில் வெண்டைக்காய்  கிலோ ஒன்றுக்கு எட்டு ரூபாய்க்கு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மிகுந்த வேதனை உள்ளனர். மேலும் பெரும்பாலானோர் அந்த காய்கறி சந்தைக்கு எடுத்துச் செல்ல தயங்குகின்றனர். காரணம் அவர்களுக்கு போக்குவரத்து செலவு கூட மிஞ்சாது எனவும் அவர்கள் எண்ணி அவர்கள் காய்கறி சந்தைக்கு எடுத்துச் இல்லாமல் மிகுந்த வேதனையில் உள்ளனர். ஊரடங்கு காரணமாக மக்கள் பலரும் வெளியே செல்ல தயங்குவதால் இத்தகைய இழப்பு ஏற்படுவதாக அப்பகுதி சுற்றுவட்டார விவசாயிகள் கூறுகின்றனர்.

From around the web