விவசாயிகள் விளை பொருட்களை ஆன்லைன் முறையில் விற்கலாம் – முதல்வர் தகவல்

சேலம் மாவட்டத்தில், உருக்காலையில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலத்தில் ராணுவ தளவாட உதிரிபாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டுவர மிகப்பெரிய முயற்சி மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள உருக்காலை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலத்தில் ராணுவ தளவாட உதிரிபாக தொழிற்சாலையை கொண்டுவர மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் இந்த தொழிற்சாலை வரும்போது வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறினார். தமிழகத்தில் விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்த முதலமைச்சர் இதன்
 

சேலம் மாவட்டத்தில், உருக்காலையில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலத்தில் ராணுவ தளவாட உதிரிபாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டுவர மிகப்பெரிய முயற்சி மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள உருக்காலை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலத்தில் ராணுவ தளவாட உதிரிபாக தொழிற்சாலையை கொண்டுவர மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் இந்த தொழிற்சாலை வரும்போது வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறினார். 

விவசாயிகள் விளை பொருட்களை ஆன்லைன் முறையில் விற்கலாம் – முதல்வர் தகவல்


தமிழகத்தில் விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்த முதலமைச்சர் இதன் மூலம் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் மேட்டூர் அணையில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளின் மூலம் கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பனமரத்துப்பட்டி பகுதியில் அதிக அளவில் மலர் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் ஓசூரில் சர்வதேச ஏல மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தரகு ஏதும் இன்றி விவசாயிகள் இங்கு உரிய விலைக்கு மலர்களை விற்க முடியும் என்றும் அங்கு விவசாயிகள்தங்கும் வசதி செய்யப்பட உள்ளதாகவும் கூறினார். 

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் மிகப்பெரிய காய்கறி விற்பனை சந்தை அமைக்கப்பட உள்ளதாகவும் இந்த சந்தையில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை ஆன்லைன் முறையில் விற்கலாம் என்றும் ஒரு மாதம் வரை விளை பொருட்களை குளிர்பதன கிடங்கில் இலவசமாக வைத்துக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் கூறினார். 


From around the web