பிரபல நடிகர் விவேக் காலமானர்

 
பிரபல நடிகர் விவேக் காலமானர்

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை 11 மணி அளவில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகை உலுக்கியுள்ளது 

நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டதால் நேற்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ஆஞ்சியோகிராம் மற்றும் எக்மோ கருகளின் உதவியால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது.

vivek

இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் நான்கு முப்பது மணி அளவில் நடிகர் விவேக் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது

இதனை அறிந்த கோலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உண்மை சீடனாக இருந்து அவரது வழிகாட்டுதலின்படி ஒரு லட்சம் மரங்களை நடுவதற்கு ஆக தீவிர முயற்சியில் இருந்தவர் நடிகர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக்கின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

From around the web