சரிந்தது தங்கம், வெள்ளி விலை: இன்றைய விலை என்ன?

 
gold

கடந்த சில மாதங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 குறைந்தது விற்பனையாகி வருகிறது. இதனால் தங்கம் விலை இன்று சவரன் ஒன்று ரூ.216 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,000 என்ற விலையில் விற்பனை ஆகிவருகிறது. அதேபோல் 24 கேரட் சுத்தத் தங்கத்தின் ஒரு சவரன் ரூ.39,872க்கு விற்பனை ஆகிறது.

silver

மேலும், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1.10 குறைந்துள்ளது என்பதும் இன்று சென்னையில் 1 கிராம் வெள்ளி ரூ.76க்கு விற்பனை ஆகிறது என்பதும், 1 கிலோ வெள்ளி ரூ.76000க்கு விற்பனை ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web