மாடியிலிருந்து மதுவினால் விழுந்து பலி!மீண்டும் உயிரை வாங்கிய மதுபானம்!

சென்னையில் குடிபோதையில் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது!
 
மாடியிலிருந்து மதுவினால் விழுந்து பலி!மீண்டும் உயிரை வாங்கிய மதுபானம்!

தமிழக மக்கள் மத்தியிலும் குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் சென்னைக்கு சென்றால் பிழைத்துவிடலாம் என்ற நிலை உள்ளது .மேலும் இந்த சென்னை ஆனது அனைவராலும் சிங்காரச் சென்னை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் வந்தாரை வாழவைக்கும் பூமியாகவும் சென்னை உள்ளது உண்மைதான். சென்னையில் தினமும் சோகங்கள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது. மேலும் சென்னையில் தினமும் செயின் பறிப்பு கொள்ளை போன்றவைகள் நடைபெறுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.

chennai

மேலும் தற்போது ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்பப் பெண்களை மிகவும் கொடுமைக்கு உள்ளாக்குவது மதுபானம். மேலும் தமிழகத்தில் மதுபானமே அதிகமாக விற்பனை செய்யும் தொழிலாக உள்ளது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் காணப்படுகிறது. இந்த மதுபானத்தினால் தினமும் உயிர் இழப்புகள் போன்றவை நிகழ்வதும் கொடுமையான செயலாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இந்த மதுபானத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் மூன்றாம் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் பிரதாப் குமார் என்ற இளைஞர். இவர் தேனியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சென்னையில் தங்கி சினிமா பணியில் பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. தற்போது அவர் மதுபானத்தினால் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் பிரதாப் குமாரின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web