மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

 
facebook

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கும் டிஜிட்டல் மீடியாக்களுக்கும் புதிய விதிமுறைகளை மத்திய அரசு ஏற்படுத்தியது என்பதும் இந்த விதிமுறைகளுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத காலக்கெடு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் இந்த விதிகளை கடைபிடிக்காத சமூக வலைதளங்கள் இந்தியாவில் தடை செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசின் டிஜிட்டல் ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட ஒப்புக்கொண்டுள்ளன

whatsapp

ஆனால் டுவிட்டர் மட்டும் இன்னும் இந்த விஷயத்தில் தனது ஒப்புதலை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதிகளின்படி சமூக வலைதளங்கள் மீது எழும் புகார்களை விசாரணை செய்ய தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற முக்கிய விதியை ஃபேஸ்புக், வாட்ஸ்அப், கூகுள் ஒப்புக் கொண்டுள்ளன என்பதும் ஆனால் ட்விட்டர் மட்டும் இந்த விதிக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web