முகநூல் காதலால் விபரீதம்: 13 வயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை

 

முகநூல் காதலால் 13 வயது சிறுமியை 4 பேர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

கிருஷ்ணகிரியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு முகநூல் மூலம் தரணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறி இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்

அப்போது இன்னொரு நண்பரான விபின் ராஜ் என்பவர் 13 வயது சிறுமியுடன் தான் உன்னுடைய காதலனிடம் அழைத்து செல்வதாக கூறி காரை எடுத்து வந்தார். அந்த காரில் அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்தபோது விபின் ராஜ் தனது இரண்டு நண்பர்களை இடையில் ஏற்றிக் கொண்டார்

அதன் பின்னர் காரிலேயே மூவரும் மாறி மாறி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பின்னர் ஓசூர் பேருந்து இதில் அனாதையாக இறக்கி விட்டு விட்டுச் சென்றனர் பின்னர் இதுகுறித்து போன் மூலம் தனது காதலனிடம் சிறுமி தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த காதலன் தரணி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் 

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் தங்கள் மகளை காணவில்லை என்று புகார் கொடுக்க அந்த சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து காதலன் தரணி மற்றும் காரில் பலாத்காரம் செய்த மூவரையும் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

From around the web