பாமக ராம்தாஸ் கோரிக்கையை ஏற்று கொண்ட முக ஸ்டாலின்: கூட்டணி வருமா?

 
பாமக ராம்தாஸ் கோரிக்கையை ஏற்று கொண்ட முக ஸ்டாலின்: கூட்டணி வருமா?

தமிழக அரசு சமீபத்தில் இயற்றிய 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 405 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த 405 மாணவர்களில் ஒரு சிலருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் ஏழ்மை காரணமாக அந்த கட்டணத்தை கட்ட முடியாமல் அந்த மாணவர்கள் தவித்து வருவதாக செய்திகள் வெளியானது

இதனையடுத்து நேற்று தனது டுவிட்டரில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் ’தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்து உள்ள மாணவர்களுக்கு மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது 
இந்த நிலையில் திடீரென சற்று முன்னர் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

ramdoss

முக ஸ்டாலின் இந்த முடிவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அரசியல் விமர்சகர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இதனை பாராட்டி வருகின்றனர். தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அதிமுக ஏற்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் முந்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸின் கோரிக்கையை முகஸ்டாலின் நிறைவேற்றி உள்ளதால் இரு கட்சிகளும் நெருக்கமாகி கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

From around the web