கிருமிநாசினி தெளிப்பு எதிரொலி: சென்னையில் முடிவெட்ட ரூ.500?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக முடிதிருத்தும் நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்படாத நிலையில் சமீபத்தில் நிபந்தனையுடன் திறக்க அனுமதிக்கப்பட்டது ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கிருமிநாசினி பயன்படுத்த கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் முடிதிருத்தும் நிலையங்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் முடிதிருத்தும் நிலையங்களில் கிரும நாசினியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான கட்டணத்தையும் சேர்த்து வசூலிப்பதாகவும் இதனால் பெரிய அளவிலான முடி திருத்தும் நிலையங்களில் ரூபாய் 500 வரை முடிவெட்ட கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும்
 

கிருமிநாசினி தெளிப்பு எதிரொலி: சென்னையில் முடிவெட்ட ரூ.500?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக முடிதிருத்தும் நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்படாத நிலையில் சமீபத்தில் நிபந்தனையுடன் திறக்க அனுமதிக்கப்பட்டது

ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கிருமிநாசினி பயன்படுத்த கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் முடிதிருத்தும் நிலையங்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் முடிதிருத்தும் நிலையங்களில் கிரும நாசினியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான கட்டணத்தையும் சேர்த்து வசூலிப்பதாகவும் இதனால் பெரிய அளவிலான முடி திருத்தும் நிலையங்களில் ரூபாய் 500 வரை முடிவெட்ட கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் சாதாரண முடிவெட்டும் கடைகளில் ரூ.200 வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் வெளிவந்த தகவலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

சாதாரண நாட்களில் முடிவெட்ட ரூபாய் 70 முதல் 100 வரை மட்டுமே கட்டணமாக அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிருமிநாசினி உள்ளிட்ட வசதிகளுடன் கூடுதலாக 100 ரூபாய் கட்டணம் வசூலிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

எனவே இதுகுறித்து அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

From around the web