"ஆன்லைன் ரம்மி" தடைச்சட்டம்! உடனே நிறைவேற்றுக!!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உடனே நிறைவேற்றுக என்று பாமக நிறுவனர்  ராமதாஸ் கூறியுள்ளார்
 
rummy

தற்போது நாம் நவீன உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். நவீன உலகத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் அதிகரித்திருக்கிறது. மேலும் தற்போது பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் நிலைக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்டர்நெட் சேவையானது நாடெங்கும் அதிகரித்து காணப்படுகிறது.  பெரும்பாலானோர் இதனை தவறான வழிகளில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சூதாட்டம் ஆனது தற்போது ஆன்லைன் வாயிலாக நடைபெறுவதும் வருத்தத்தை அளிக்கிறது.ramadass

அதுகுறித்து தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ்  சில தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். அதன்படி ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உடனே நிறைவேற்ற தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வளாகத்தில் பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

காவலர் தற்கொலைக்கு முயன்ற தன் பின்னணி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன .ரூபாய் 7 லட்சத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்ததால்தான் காவலர் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

From around the web