சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு! இருசக்கர வாகனங்களில் வாக்கு சேகரிப்பு!

விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம்!
 
சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு! இருசக்கர வாகனங்களில் வாக்கு சேகரிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாஜக , பாமக கட்சி வைத்துள்ளது. அதற்காக பாஜக கட்சிக்கு 20 தொகுதிகளிலும் பாமக ஆட்சிக்கு 23 தொகுதிகளையும் வழங்கியது. மேலும் தேமுதிக கட்சி அதிமுக கூட்டணியில் இருக்கும் என்ற நிலைமை இழுபறியில் இருந்தது. அதற்கு விடையாக கேப்டன் விஜயகாந்த் அதிமுக கூட்டணி இருந்து விலகியதாக கூறினார்.

tmtk

பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் அமமுக கட்சியுடன் கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சந்திக்க உள்ளது. அதற்காக தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தற்போது மங்கலம்பேட்டை பேரூராட்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். மேலும் அவர் கூறினார், விருத்தாசலத்தை மையமாகக்கொண்டு தனி மாவட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் விருத்தாச்சலத்தில் நல்ல மருத்துவமனை அமைத்து தரப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும் அவரது தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் போற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு கிடைக்கிறது .மேலும் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web