10ஆம் வகுப்பு தேர்வு பொறுப்பாளர், கண்காணிப்பாளருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வை எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர். மேலும் தேர்வை நடத்த தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பொறுப்பாளரான தேர்வுத்துறை இணை இயக்குனருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து தர்மபுரியில் உள்ள தனது இல்லத்தில் தேர்வுத்துறை இயக்குனர் தனிப்படுத்திக் கொண்டதாக
 

10ஆம் வகுப்பு தேர்வு பொறுப்பாளர், கண்காணிப்பாளருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வை எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர். மேலும் தேர்வை நடத்த தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பொறுப்பாளரான தேர்வுத்துறை இணை இயக்குனருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து தர்மபுரியில் உள்ள தனது இல்லத்தில் தேர்வுத்துறை இயக்குனர் தனிப்படுத்திக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

தேர்வுக்கு பொறுப்பாளரான தேர்வுத்துறை இயக்குனர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் தேர்வு பணியை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

மேலும் தேர்வுத் துறை கண்காணிப்பாளர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரும் தனது வீட்டில் தனிமைப்படுத்திகொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தேர்வுத் துறை இயக்குனர் மற்றும் தேர்வுத் துறை கண்காணிப்பாளர் ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்தாலும் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது

From around the web