முதல்வர் ஆகிறாரா முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி? பரபரப்பு தகவல்

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் அசாம் மாநில தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அம்மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்தியாவையே பரபரப்பை ஏற்படுத்திய பாபர் மசூதி, ராமர் கோவில் விவகாரம் உள்பட பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். இவருக்கு சமீபத்தில் மாநிலங்களவை எம்பி பதவியை மத்திய அரசு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது அரசுக்கு சாதகமாக பல தீர்ப்புகளை
 

முதல்வர் ஆகிறாரா முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி? பரபரப்பு தகவல்

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் அசாம் மாநில தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அம்மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்தியாவையே பரபரப்பை ஏற்படுத்திய பாபர் மசூதி, ராமர் கோவில் விவகாரம் உள்பட பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். இவருக்கு சமீபத்தில் மாநிலங்களவை எம்பி பதவியை மத்திய அரசு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

அரசுக்கு சாதகமாக பல தீர்ப்புகளை இவர் வழங்கியதால் தான் இந்த பதவி கொடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அசாம் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்தக் கருத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகாய் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்தில் பாஜக சார்பாக ரஞ்சன் கோகாய் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web