இ-விசா கட்டாயம்: ஆப்கன் மக்களுக்கு மத்திய அரசு உத்தரவு

 
afghani evisa

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு இ-விசா கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்களின் ஆட்சி நடந்து கொண்டிருப்பதை அடுத்து ஏராளமானோர் அந்நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் இந்தியாவுக்கும் வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியா வருவதற்கு இ-விசா கட்டாயம் என்றும் https://www.indianvisaonline.gov.in/ என்ற இணையதளத்தில் இவிசா பதிவு செய்த பின்னர் தான் இந்தியாவுக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 

ஆப்கானிஸ்தானில் இருந்து சமீபத்தில் வந்த ஒரு சிலர் வந்திருந்த நிலையில் அவர்களில் 16 பேருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இ-விசா என்ற நடைமுறையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web