சபரிமலைக் கோயில் திறக்கப்பட்டாலும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை…!!

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வருகையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தில் உள்ளது. இருப்பினும் பல மாதங்களாக வீழ்ச்சியினை நோக்கிச் செல்லும் பொருளாதாரத்தினை தலைதூக்கி நிறுத்த 5 வது கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சீரியல் படப்பிடிப்புகள் நடத்துதல், ஹோட்டல்களை இயக்குதல், அரசு அலுவலகங்கள் சில இயங்குதல், வழிபாட்டுத் தலங்கள் செயல்படுதல், பேருந்து செயல்படுதல் என தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் வழிபாட்டுத் தலங்களைத் திறந்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து தென்னிந்தியாவினைப் பொறுத்தவரை கோடி கோடியாய்
 
சபரிமலைக் கோயில் திறக்கப்பட்டாலும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை…!!

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வருகையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தில் உள்ளது. இருப்பினும் பல மாதங்களாக வீழ்ச்சியினை நோக்கிச் செல்லும் பொருளாதாரத்தினை தலைதூக்கி நிறுத்த 5 வது கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றுள் சீரியல் படப்பிடிப்புகள் நடத்துதல், ஹோட்டல்களை இயக்குதல், அரசு அலுவலகங்கள் சில இயங்குதல், வழிபாட்டுத் தலங்கள் செயல்படுதல், பேருந்து செயல்படுதல் என தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் வழிபாட்டுத் தலங்களைத் திறந்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து தென்னிந்தியாவினைப் பொறுத்தவரை கோடி கோடியாய் வசூல் பெறும் திருப்பதி தேவஸ்தானக் கோயில், கேரளாவில் உள்ள சபரிமலை கோயில் போன்றவை திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சபரிமலைக் கோயில் திறக்கப்பட்டாலும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை…!!

கொரோனா பாதிப்பானது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் போன்ற 3 மாநிலங்களில் அதிகரித்த வண்ணமே உள்ளதால், வழிபாட்டுத் தலங்கள் குறித்து எதுவும் இப்போதைக்கு ஆலோசிக்கவில்லை என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

மேலும் இந்தநிலையில் கேரளாவில் ஏறக்குறைய மூன்று மாதங்கள் கழித்துத் திறக்கப்படும் சபரி மலைக் கோவில் திறக்கப்பட்டாலும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா மேலும் கட்டுக்குள் வந்தபின்னரே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுவதால் கடவுளை தரிசிக்க்கலாம் என நினைத்திருந்த பக்தர்களுக்கு இதன்மூலம் மிஞ்சியது ஏமாற்றமே ஆகும்.

From around the web