கொரோனா குணமானாலும் இந்த நோய் உங்களை விடாது துரத்தும்!

திருச்சியில் ஆறு பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று நோய் கண்டறிய பட்டுள்ளது!
 
corona

தற்போது நாடெங்கும் அதிகமாக பேசப்படும் ஒரு வார்த்தையாக கொரோன வைரஸ் மாறியுள்ளது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த பயத்துடன் தங்களை பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வண்ணமாக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நிவாரணப் பொருட்களையும்  வழங்கி வருகிறது. அதை பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு சென்றடைகின்றன. மேலும் பல மாநிலங்களில் இந்த நோயினை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப் படுகின்றன.balck fungus

இதனால் ஊரடங்கு உள்ள மாநிலங்களில் வாழும் மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். காரணம் என்னவெனில் இந்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் மூடப்பட்டு அதில் பணிபுரிபவர்கள் வேலையின்றி தவிப்பார்கள். இந்நிலையில் இத்தனை கட்டுப்பாடுகள் போட்டாலும் அது என்னவோ நோய் பரவி கொண்டேதான் உள்ளது. மேலும் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சியான நோய் ஒன்று உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நோயானது கருப்பு பூஞ்சை  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது கருப்பு பூஞ்சை நோயானது பெரும்பாலும் கொரோன நோயினால் பாதிக்கப் பட்டவர்களே அவதிக்குள்ளாகின்றனர் என்றும் ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் பெரும்பாலும் பல பகுதிகளில் மிகவும் வேகமாக பரவுகிறது. இந்நிலையில் திருச்சியில் 6 பேருக்கு தற்போது புதிதாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 6 பேரும் கொரோன  இருந்து மீண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனவினால் வெற்றி பெற்றவர்கள் கூட இந்த நோய்க்கு அதிகமாக பாதிப்புக்குள்ளாகுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

From around the web