இரட்டை இலக்க தொகுதிகள் கூட கிடைக்காது: பாஜகவுக்கு பிரசாந்த் கிஷோர் சவால்!

 

பாஜகவிற்கு வரும் தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகள் கூட கிடைக்காது என பிரசாந்த் கிஷோர் சவால் விட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

தமிழகம், புதுவை, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பதும் அவர் கொடுத்து வரும் பல்வேறு ஐடியாக்களின் அடிப்படையில் தான் திமுக செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

prasanth

இந்த நிலையில் தமிழகத்தை போலவே மேற்கு வங்கத்திலும் பாஜக மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் கூட கிடைக்காது என்றும் இரட்டை இலக்க தொகுதிகள் கிடைப்பது சாத்தியமே இல்லை என்றும் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளதாவது: இந்த ட்விட்டை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். பாஜக இரட்டை இலக்கத்தை கடந்தால் நான் டுவிட்டரை விட்டு விலகுகிறேன் என்றும் அவர் சவால் விட்டுள்ளார் 

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக பெரும்பாலான வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முயற்சித்து வரும் நிலையில் பாஜக இரட்டை இலக்க தொகுதிகளை கூட பிடிக்காது என பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web