கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை-ஈபிஎஸ், ஓபிஎஸ்!

அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு மாறாக செயல்பட்டால் யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்!
 
eps ops

தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறுகிறது. மேலும் திமுகவானது 10 ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பத்து ஆண்டுகள் வரையிலும் தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் குறிப்பாக அதிமுகவின் பெண் முதல்வரான செல்வி  ஜெயலலிதாவின் ஆட்சியே தமிழகத்தில் இருந்தது என்றும் குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதனையடுத்து முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்.admk

  தற்போது அதிமுக கட்சியானது ஓரளவு வலிமையுடன் காணப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது எதிர்கட்சியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  எதிர்க்கட்சியினர் பொதுவாகவே ஆளும் கட்சியை விமர்சித்து வழக்கம்தான். அதேபோல்தான் ஆளும் கட்சிக்கு பல்வேறு கேள்விகளையும் பல்வேறு திட்டங்களையும் அறிவுரைகளையும் எதிர்க்கட்சியின் சார்பில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தங்களது கட்சி  தற்போது சில எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது .

அதன்படி அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு மாறாக செயல்பட்டால் யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். மேலும் அதிமுக நிர்வாகத்தை விமர்சித்து சமூகவலைதளம் போன்றவற்றில் கருத்து பரிமாற்றம் செய்யக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். மேலும் அடிப்படை காரணம் இன்றி கட்சிப் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அதிமுக நிர்வாகத்தின் சார்பில் கூறப்படுகிறது. மேலும் கட்டளையை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக சார்பில் திட்டவட்டமாக கூறுகிறது .அதிமுகவுக்காக உழைக்க விரும்புவோர் மக்கள் தொண்டில் மட்டும் கவனம் செலுத்த ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

From around the web