ஓபிஎஸ் தொகுதியில் இபிஎஸ் பிரச்சாரம்! போலீஸ் பாதுகாப்பு!

துணை முதல்வர் போட்டியிடும் போடிநாயக்கனூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை!
 
ஓபிஎஸ் தொகுதியில் இபிஎஸ் பிரச்சாரம்! போலீஸ் பாதுகாப்பு!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் சட்டமன்ற தேர்தல்  தமிழகத்தின் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.ஆளும் கட்சியான அதிமுக கட்சி கூட்டணியாக பாஜக, பாமக போன்ற கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. எதிர்கட்சியான திமுக கட்சி தன் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியின் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

eps

 அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அவர் அத்தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதிமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.

அவர்  தமிழகத்தில் உள்ள பல பகுதிகளுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வருகின்றனர்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்துள்ளார். அவர் வருகையை ஒட்டி அப்பகுதியில் போலீசார் கூட்டம் நிறுவப்பட்டது. திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

From around the web