தமிழகத்திலும் இபாஸ் முறை ரத்தா? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இபாஸ் கண்டிப்பாக தேவை என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் இபாஸ் கிடைப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இருந்தால் மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய
 

தமிழகத்திலும் இபாஸ் முறை ரத்தா? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இபாஸ் கண்டிப்பாக தேவை என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் இபாஸ் கிடைப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இருந்தால் மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது

ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இபாஸ் நடைமுறையை அனைத்து மாநிலங்களும் ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனால் பொருளாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் வேலை வாய்ப்பு பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது

இதனை ஏற்றுக்கொண்ட புதுவை உள்பட ஒரு சில மாநிலங்கள் இபாஸ் முறையை அதிரடியாக ரத்து செய்தன இந்த நிலையில் தமிழகத்திலும் இபாஸ் ரத்து தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இபாஸ் ரத்து குறித்த அறிவிப்பு எந்த நேரமும் வெளி வர வாய்ப்பிருப்பதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன

From around the web