அடுத்தடுத்து இன்பம்! இன்னும் மூன்று மணி நேரத்திற்கு  15 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
அடுத்தடுத்து இன்பம்! இன்னும் மூன்று மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் கோடைகாலம் என்றால் அனைவரும் முதலில் கூறுவது இந்த மே மாதம் மட்டும் தான். ஆனால் மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் ஆனது சுட்டெரிக்கிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உஷ்ணமான காற்று வீசுகிறது. இதனால் தமிழக மக்கள் மிகவும் எரிச்சலுடன் கூடிய சூழ்நிலையில் உள்ளனர். மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெப்ப நிலையானது இயல்பை காட்டிலும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து சோகமான நிலை இருக்கிறது.

rain

 கோடைகால தொடங்கியதும் சென்னை போன்ற நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அபாய மக்கள் மனதில் நிலவுகிறது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்துடன் மே மாதத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையமானது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி அளித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதன்படி தமிழகத்தில் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. தென் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி கூறியுள்ளது. 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறுகிறது. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல், கரூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.  ஒரு சில பகுதிகளில் கோடை காலத்தில் உஷ்ணமும் நீங்கியதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

From around the web