தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஆங்கில ஆசிரியர்: சம்பளம் வராததால் பரிதாபம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி கோடிக்கணக்கான மக்கள் சிக்கலில் உள்ளனர் ஒரு சிலர் தாங்கள் ஏற்கனவே பார்த்து வந்த தொழிலுக்கு பதிலாக காய்கறி வியாபாரம் ஹோட்டல் வியாபாரம் உள்ளிட்ட தொழில்களில் இறங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் டெல்லியில் உள்ள சர்வோதய வித்யாலயா என்ற
 

தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஆங்கில ஆசிரியர்: சம்பளம் வராததால் பரிதாபம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி கோடிக்கணக்கான மக்கள் சிக்கலில் உள்ளனர்

ஒரு சிலர் தாங்கள் ஏற்கனவே பார்த்து வந்த தொழிலுக்கு பதிலாக காய்கறி வியாபாரம் ஹோட்டல் வியாபாரம் உள்ளிட்ட தொழில்களில் இறங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டெல்லியில் உள்ள சர்வோதய வித்யாலயா என்ற பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த வாசீர் சிங் என்பவர் கடந்த சில மாதங்களாக சம்பளம் வரவில்லை என்பதால் வேறு வழியின்றி தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்

இந்த ஆசிரியர் இதுகுறித்து கூறிய போது ’நான் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தேன். தனியார் பள்ளி என்பதால் கடந்த சில மாதங்களாக எனக்கு சம்பளம் வரவில்லை. இதனால் எனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வேறு வழியில்லாமல் தற்போது நான் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்

இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வர் தள்ளுவண்டியில் மனைவியின் துணையுடன் ஓட்டல் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பளம் எந்தவித தங்கு தடையின்றி வந்து கொண்டிருக்கும்போது தனியார் பள்ளி ஆசிரியர்கள் மட்டும் சம்பளம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web