அண்ணா பல்கலைகழகம் கூறும் இந்த தகவலால் இன்ஜினியர் மாணவர்கள் மகிழ்ச்சி!

நேரடி பதில்களைக் கொண்ட கேள்விக்கு பதில் விளக்க வகை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும் அண்ணாபல்கலைக்கழகம் கூறும்  தகவல்!
 
அண்ணா பல்கலைகழகம் கூறும் இந்த தகவலால் இன்ஜினியர் மாணவர்கள் மகிழ்ச்சி!

கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. அதற்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வானது ஆன்லைன் முறையில் நடைபெற்றது மேலும் இன்ஜினியர் மாணவர்களுக்கான அரியர் தேர்வுகள் ஆல்பாஸ் செய்யப்பட்டதாக கூறப்பட்டன. ஆனால் அதற்கு எதிர்ப்பு , பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதி மன்றம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

anna university

அதன்படி அரியர் மாணவர்களை ஆல்பாஸ் செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளது. மேலும் அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலும் தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுகள் 8 வாரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது அண்ணாபல்கலைக்கழகம் ஆனது அரியர் மாணவர்கள் மட்டுமின்றி நடப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் இன்பமான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற மே மாதம் நடைபெறும் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு முறையில் சில மாற்றங்களை கொண்டு வரப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

மேலும் அண்மையில் வெளியான தேர்வு முடிவுகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வியை தழுவினர் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கூறப்படுகிறது. மேலும் பல மாணவர்கள் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் தோல்வி அடைந்ததாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. நேரடி விடைகளை கொண்ட கேள்விகளுக்கு பதில், விளக்கம் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. மேலும் மாணவர்கள் தேர்வின்போது புத்தகத்திலும் இணையதளத்திலும் எடுத்துக்காட்டுகளை தேடி அதன்படி விடை அளிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. புதிய விளக்கம் வகை தேர்வு இறுதி செமஸ்டர் மாணவர்கள் தவிர ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் என்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

From around the web