பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு: மாணவர்கள் குழப்பம்

 

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவில் ஒருசில மாணவர்களுக்கு WH1 என தேர்வு முடிவு காண்பிப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைத்தது குறித்து அண்ணா பல்கலைகழகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆன்லைன் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகம் என்பதால் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு குறித்தும் அறிவிப்பு இல்லை என்றும் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது

சில இறுதியாண்டு மாணவர்கள் வளாகத் நேர்முகங்கள் மூலம் பணிக்கு தேர்வாகியுள்ள நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அவர்களது வேலைக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web