பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 

யுஜிசியின் அறிவிப்பின்படி பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தியே தீரவேண்டும் என்ற நிலையில் இந்தத் தேர்வுக்கான தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது

 

யுஜிசியின் அறிவிப்பின்படி பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தியே தீரவேண்டும் என்ற நிலையில் இந்தத் தேர்வுக்கான தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர் என்பதும் இந்த முறை செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறப் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருந்துகொண்டே மாணவர்கள் ஆன்லைன் மூலம் இந்த தேர்வை எழுத உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இம்மாதம் 22 முதல் 29 வரை நடைபெறும் இந்த ஆன்லைன் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணா பல்கலைக் கழகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது 

இதன்படி மாணவர்கள் தங்கள் செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரியை பல்கலைக்கழகத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் தற்போது தங்கள் செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரியை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web