ஜோர்டான் நாட்டில் இன்று முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு

கொரோனா குறித்து மக்களுக்கு இன்னும் சீரியஸ்னஸ் புரியவில்லை என்றும், கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் இன்னும் பல பொதுமக்கள் அதனுடைய விபரீதம் புரியாமல் சாலைகளில் நடமாடி வருகின்றனர் என்றும் பல நாட்டு அரசுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன இந்த நிலையில் பொதுமக்கள் வீட்டிலேயே தங்குமாறு வலியுறுத்தப்பட்டாலும், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை இதனை அடுத்து ஜோர்டான் நாட்டில் இன்று முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவிர்க்கமுடியாத அவசர தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியே வர பொதுமக்கள்
 
ஜோர்டான் நாட்டில் இன்று முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு

கொரோனா குறித்து மக்களுக்கு இன்னும் சீரியஸ்னஸ் புரியவில்லை என்றும், கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் இன்னும் பல பொதுமக்கள் அதனுடைய விபரீதம் புரியாமல் சாலைகளில் நடமாடி வருகின்றனர் என்றும் பல நாட்டு அரசுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன

இந்த நிலையில் பொதுமக்கள் வீட்டிலேயே தங்குமாறு வலியுறுத்தப்பட்டாலும், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை

இதனை அடுத்து ஜோர்டான் நாட்டில் இன்று முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவிர்க்கமுடியாத அவசர தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியே வர பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஊரடங்கு உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே சிரியா ஈரான் எகிப்து இஸ்ரேல் ஆகிய எல்லைகளைக் ஜோர்டான் நாடு மூடிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web