யானையின் கொலைக்கு காரணவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கணும்.. விஜயகாந்த்

கேரள மாநிலத்தில் உணவு தேடி காட்டு யானை ஒன்று ஊருக்குள் வந்ததையடுத்து, அங்குள்ள சிலர் அதற்கு அன்னாசிப் பழத்தை கொடுத்துள்ளனர். மகிழ்ச்சியுடன் சாப்பிடத் துவங்கிய அதற்கு மனிதர்கள் செய்யக் காத்திருந்த கோர சம்பவம் குறித்து தெரியவில்லை. அதாவது யானைக்கு அவர்க கொடுத்த அன்னாசி பழத்தில் வெடிமருந்தை வைத்து கொடுக்க, அது சாப்பிடும்போது வெடித்துள்ளது, இதனால் அதற்கு பெரிய காயம் ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும் அங்கிருந்த மக்களுக்கோ, பொருளுக்கோ எந்தவித சேதமும் விளைவிக்காமல் சென்ற அந்த யானை
 
யானையின் கொலைக்கு காரணவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கணும்.. விஜயகாந்த்

கேரள மாநிலத்தில் உணவு தேடி காட்டு யானை ஒன்று ஊருக்குள் வந்ததையடுத்து, அங்குள்ள சிலர் அதற்கு அன்னாசிப் பழத்தை கொடுத்துள்ளனர். மகிழ்ச்சியுடன் சாப்பிடத் துவங்கிய அதற்கு மனிதர்கள் செய்யக் காத்திருந்த கோர சம்பவம் குறித்து தெரியவில்லை.

அதாவது யானைக்கு அவர்க கொடுத்த அன்னாசி பழத்தில் வெடிமருந்தை வைத்து கொடுக்க, அது சாப்பிடும்போது வெடித்துள்ளது, இதனால் அதற்கு பெரிய காயம் ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும் அங்கிருந்த மக்களுக்கோ, பொருளுக்கோ எந்தவித சேதமும் விளைவிக்காமல் சென்ற அந்த யானை உயிரிழந்தது.

யானையின் கொலைக்கு காரணவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கணும்.. விஜயகாந்த்

அதன்பின்னர் பிரேத பரிசோதனையில், அந்த யானை கர்ப்பமாக இருந்தது தெரியவர, இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் வேதனை அடைந்ததுடன், கோபத்தால் கொந்தளித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு சினிமாப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “கொரோனா போன்ற வைரஸ்கள், நிசர்கா புயல், வெட்டுக்கிளிகள் உட்புகுதல் எனத் தொடர்ந்து நடக்கும் மோசமான சம்பவங்கள் மனித இனத்தின் அழிவிற்கே.

உண்மையில் யானையை வெடி வைத்துக் கொன்ற நபர்களுக்கு கேரள அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கர்ப்பிணி யானையினை எவ்வாறு கொடூர முறையில் கொன்றார்கள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

உண்மையில் மனிதநேயம் தொலைந்து போனதாய் நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

From around the web