மின் தகன மேடை-தஞ்சை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!கையை விரித்த ஐகோர்ட் கிளை!!

தாராசுரம் திருநாகேஸ்வரம் சோழபுரம் பேரூராட்சிகளில் மின்சார தகன மேடை அமைக்க கோரி வழக்கு!
 
mayanam

தற்போது இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் நம் நாட்டில் பல பகுதிகளில் இந்த உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். மேலும் பல பகுதிகளில் கொரோனா உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒன்றாக வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது மிகவும் வேதனையாக காணப்பட்டது. மேலும் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக உடல்கள் வைக்கப்பட்டு அவை ஒவ்வொன்றாக தகனம் செய்யப்பட்டன.highcourt

இந்நிலையில் தற்போது தங்களது ஊராட்சி பகுதிகளில் தகன மேடை அமைக்க கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது.. இது நம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிற தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் காணப்படுகிறது. அதன்படி தாராபுரம் திருநாகேஸ்வரம் சோழபுரம் போன்ற பேரூராட்சிகளில் மின்சார தகன மேடை அமைக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும் மனுதாரர் கோரிக்கை பற்றி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை மூடி வைத்து உயர்நீதிமன்ற கிளை.

மேலும் மின் தகன மேடை அமைக்க கோடிக்கணக்கில் பணம் செலவாகும் என்பதால் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும் ஹை கோர்ட் கூறியுள்ளது. கொரோனா உயிரிழப்பு அதிகமாக உள்ள நிலையில் தகனம் செய்ய மூன்று பேரூராட்சியில் மின் தகன மேடை இல்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது மேலும் மின் தகன மேடை இல்லாததால் அருகில் உள்ள கும்பகோணம் மயானத்திற்கு உடல்கள் கொண்டு வரப்படுகின்றன என்று மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது.

From around the web