சென்னையில் மின்சார ரயில்கள் இயக்கம்: ஆனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை!

 

சென்னையில் இன்று முதல் புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரயிலில் பயணம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது 

சென்னையில் உள்ள அரசு ஊழியர்களுக்காக மட்டுமே இன்று முதல் புறநகர் ரயில்சேவை மீண்டும் தொடங்க உள்ளதாகவும் இந்த ரயிலில் கொரோனா முன்கள பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டும் பயணம் செய்யலாம் என்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
கடற்கரை-செங்கல்பட்டு, வேளச்சேரி-அரக்கோணம், கும்மிடிப் பூண்டி ஆகிய வழித்தடங்களில் 38 ரயில்கள் இயக்கப்படும் என்றும் வெகுவிரைவில் பொதுமக்களும் பயணம் செய்யும் வகையில் அனுமதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது

மின்சார ரயில் இயங்கியும் தங்களால் பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பதை அறிந்து பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்

From around the web