நாளை திட்டமிட்டபடி 234 தொகுதியிலும் தேர்தல்!ஏழு தொகுதிகளில் தேர்தல் ரத்தாகும் என்பது வதந்தியே!

அனைத்து தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் தேர்தல் அதிகாரிகள் தகவல்!
 
நாளை திட்டமிட்டபடி 234 தொகுதியிலும் தேர்தல்!ஏழு தொகுதிகளில் தேர்தல் ரத்தாகும் என்பது வதந்தியே!

சட்டமன்ற தேர்தல் நாளைய தினம் தமிழகத்தில் நடைபெற உள்ளது.தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள் தங்களது வேலைகளை மிகவும் தீவிரமாகவும் செயல்படுகின்றனர். மேலும் அனைத்து தொகுதிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மாலையில் செய்தியாளரை சந்தித்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்த தகவல்களை தெரிவித்தார்.

vote

மேலும் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளிலும் பல தேர்தல் மையங்கள் உள்ளன. மேலும் அந்த பல தேர்தல் மையங்களுக்கும் தேர்தல் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போன்றவைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு சில தொகுதிகளில் நடந்த அசம்பாவிதம் அதனால் அந்த தொகுதிகளில் தேர்தல் என்ற தகவல் வெளியாகி கொண்டிருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேர்தல் அதிகாரிகள் தற்போது தகவல்அளித்தனர்.

 அதன்படி தமிழகத்தில் திட்டமிடப்பட்டபடி 234 தொகுதிகளிலும் நாளை தினம் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் கூறினார். பணப்பட்டுவாடா புகாரால் ஏழு தொகுதிகளில் தேர்தல் ரத்தாகும் என்பது வதந்தியே எனவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் அளித்தனர். மேலும் ஏழு தொகுதிகளில் ரத்தாகும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கும் அதிகாரிகள் மறுத்துள்ளனர். தேர்தல்  தேவையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளது எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் நாளையதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் நாளை காலை தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது என்ற தகவலும் முன்னதாகவே வெளியாகிவிட்டது.

From around the web