ஆன்லைனில் வேட்புமனு, வாக்குப்பதிவு: கொரோனாவால் தலைகீழாக மாறப்போகிறதா தேர்தல்?

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு விஷயங்கள் தலைகீழாக மாறியுள்ளது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தேர்தலும் ஆன்லைன் மூலம் வேட்புமனு மற்றும் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது விரைவில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இம்மாநிலத்தில் பரிசோதனையாக ஆன்லைன் மூலம் வேட்பாளர்களின் வேட்பு மனுத்தாக்கல் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்குப்பதிவுகளை செய்யலாமா என தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது வாக்குச்சாவடிக்கு நேரே சென்று வாக்களிப்பதற்கு பலர் தயங்கி
 

ஆன்லைனில் வேட்புமனு, வாக்குப்பதிவு: கொரோனாவால் தலைகீழாக மாறப்போகிறதா தேர்தல்?

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு விஷயங்கள் தலைகீழாக மாறியுள்ளது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தேர்தலும் ஆன்லைன் மூலம் வேட்புமனு மற்றும் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

விரைவில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இம்மாநிலத்தில் பரிசோதனையாக ஆன்லைன் மூலம் வேட்பாளர்களின் வேட்பு மனுத்தாக்கல் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்குப்பதிவுகளை செய்யலாமா என தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது

வாக்குச்சாவடிக்கு நேரே சென்று வாக்களிப்பதற்கு பலர் தயங்கி வருகிறார்கள் என்பதால் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவை நடத்தினால் மிக அதிக வாக்கு சதவீதம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் வேட்பாளர்களை நேரில் வரவழைத்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பதிலாக ஆன்லைன் மூலமே வேட்புமனு தாக்கல் செய்யவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தலை திருவிழா போல் நடத்தி வந்த அரசியல்வாதிகள் இனி அதனை முற்றிலும் மறந்து விட வேண்டியதுதான் என்ற நிலை ஏற்படுமோ என்று கூறப்படுகிறது

From around the web