வெளியானது தேர்தல் அறிக்கை! வெளியிட்டார் கட்சியின் தலைவர்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை விழுப்புரத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்!
 
வெளியானது தேர்தல் அறிக்கை! வெளியிட்டார் கட்சியின் தலைவர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்கள் தமிழகம் அனைத்தும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

vck

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிக்கும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது .இந்த விடுதலை சிறுத்தை கட்சி-திமுக சார்பில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தற்போது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மேலும் அவர் திமுக ஆட்சியில் வந்தால் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தல் எனவும் கூறினார். மேலும் மேலும் தமிழகத்தில் போதை ஒழிப்பிற்கான சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்படும் எனவும் அவரது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

From around the web