புதுக்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி! 5.91 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யில் தேர்தல் பறக்கும் படையினர் 5.91கோடி மதிப்பிலான தங்கத்தினை பறிமுதல் செய்தனர்!
 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில்  தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி யில் உள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல்வேறு உத்தரவினை பிறப்பித்துள்ளது. இன்றைய தினம் தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்து கொண்டு வருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் தங்க நகைகளையும் பணத்தையும் பறிமுதல் செய்து கொண்டு வருகின்றனர்.

gold

தேர்தல் பறக்கும் படையினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது  தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 5.91 கோடி மதிப்பிலான தங்கங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் பிடித்த தங்கம் டாடா தனிஷ்க் நிறுவனத்திற்கு சொந்தமான   தங்கம்  என்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை செய்வதற்கு உரிய ஆவணங்கள்  இல்லாது  இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் அதனை  தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

From around the web