ஓமலூரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி! 17 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!

சேலம் மாவட்டம் ஓமலூரில் தேர்தல் பறக்கும் படையினர் 17 லட்சம் மதிப்பிலான வேஷ்டி, சேலை, கைக்கடிகாரங்களின் பறிமுதல் செய்தனர்!
 

தமிழகத்தில் தேர்தலானது நடைபெற இன்னும் சில தினங்களே உள்ளதால் பல பகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். மேலும் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன பரிசோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

election

மேலும் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் நகைகளையும் பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந் நிலையில் தமிழகத்தில் சில தினங்களாக தேர்தல் பறக்கும் படையினர் பணங்களையும், நகைகளையும் கைப்பற்றுகின்றனர். இதைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் ஓமலூரில் பகுதியில் வாகன பரிசோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டனர்.

அப்போது தேர்தல் பறக்கும் படையினர் ஓமலூர் பகுதியில் கொண்டு செல்லப்பட்ட 17 லட்சம் மதிப்பிலான வேஷ்டிகள், கைக்கடிகாரங்கள், சேலைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்து அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அதனை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.  மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் நடைபெறுவதால் தேர்தல் பறக்கும் படையினர்  தங்களது வேலையில் தீவிரமாக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web