தேர்தல் பணிக்காக துணை ராணுவம் தமிழகம் வருகை

தமிழகத்தில், மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் இன்று முதல் வரவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு 4 மற்றும் சேலம், திருப்பூருக்கு தலா ஒன்று என 6 கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று வரவுள்ளதாகவும் இதையடுத்து கோவை, மதுரை, நெல்லை, திருச்சிக்கு துணை ராணுவத்தினர் வரவுள்ளனர் எனவும் கூறினார். உரிமம் பெற்றுள்ள 21 ஆயிரத்து 999 துப்பாக்கிகளில், 13 ஆயிரத்து
 

தமிழகத்தில், மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் இன்று முதல் வரவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிக்காக துணை ராணுவம் தமிழகம் வருகை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு 4 மற்றும் சேலம், திருப்பூருக்கு தலா ஒன்று என 6 கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று வரவுள்ளதாகவும் இதையடுத்து கோவை, மதுரை, நெல்லை, திருச்சிக்கு துணை ராணுவத்தினர் வரவுள்ளனர் எனவும் கூறினார்.

உரிமம் பெற்றுள்ள 21 ஆயிரத்து 999 துப்பாக்கிகளில், 13 ஆயிரத்து 523 துப்பாக்கிகளை சம்மந்தப்பட்டவர்கள் ஒப்படைத்து உள்ளதாகவும், இரண்டு நாட்களில் அனைத்து துப்பாக்கிகளையும் திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சத்திய பிரதா சாகு கூறினார்.

தேர்தல் தொடர்பான புகார் எண்ணிற்கு 46,000 பேர் தொடர்பு கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.  

From around the web